மட்டக்களப்பு நகரில் லொறி உரிமையாளர்களுக்கு மணல் ஏற்றுவதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குமாறு கோரியும் நேற்று திங்கட்கிழமை பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத மணல் அகழ்வைக் கண்டித்தும் லொறி உரிமையாளர்களுக்கு மணல் ஏற்றுவதற்கான அனுமதிப்பத்திரங்களை  வழங்குமாறு கோரியும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி  மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில் பல காலமாக மணல் ஏற்றுவதற்கான லொறிகளை நாம் வைத்திருந்து மணல் ஏற்றும் தொழிலை செய்துவந்தோம். ஆனால்  கடந்த கால ஆட்சியாளர்களின் செல்வாக்கைப் சிலர் பயன்படுத்தி பல அனுமதிப்பத்திங்களைப் பெற்று மணல் அகழ்வில் ஈடுபடுகின்றனர்.   
 லொறி வைத்திருக்கும் எமக்கு மணல் அகழ்வுக்கான  அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை. ஆனால்   எதுவித லொறிகளும் இல்லாதவர்களுக்கு துறைசார்ந்த அதிகாரிகளினால்  அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையால்  எமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது.
இது தொடர்பில்  தங்களின் கோரிக்கைள் அடங்கிய மகஜரையும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரனுக்கு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர்.   
இது பற்றிய தமது கோரிக்கைகளை பல தடவைகள் உரிய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கவனத்துக்கு கொண்டுசென்றபோதிலும்  உரிய நடவடிக்கைகள் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை    என ஆர்பாட்டம்  இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரனும்  மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரனுடன்  கலந்துரையாடினர்.
 இதன் போது இவற்றுக்கு தீர்வினை பெற்றுத்தருவதாக தெரிவிக்கப்பட்டது 



