Breaking News

வெளிநாட்டு வேலை வாய்ப்பினை எதிர்பார்த்து கொண்டிருக்கும் பெண்களின் வருமானத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக சுயதொழில் ஊக்குவிப்பு வேலைத்திட்டங்கள்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி பிரிவினால் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  பகுதியில்  வெளிநாட்டு வேலை வாய்ப்பினை எதிர்பார்த்து கொண்டிருக்கும் பெண்களின் மனநிலையினை மாற்றி அவர்களின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்குடன் பல சுயதொழில் ஊக்குவிப்பு வேலைத்திட்டங்கள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

இதன் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி பிரிவினால் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  பகுதியில்  வெளிநாட்டு வேலை வாய்ப்பினை எதிர்பார்த்து கொண்டிருக்கும் பெண்களின்  வருமானத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக  தெரிவு செய்யப்பட  10 பெண்களுக்கு  ஒருவருக்கு தலா  17 900  ரூபா பெறுமதியான சுயதொழில் உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது .