என் "மச்சான்"ஸின் "லவ்" போதும்.. வேற எதுவும் தேவையில்லை... நமீதா
நமீதா... இந்தப் பெயருக்கே தமிழகத்தில் ஒரு கூட்டம் கிறங்கிப் போய்க் கிடக்கிறது. ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நமீதா.
இப்போது ஆளைக் காணவில்லை. ஆனால் தற்போது பொட்டு படம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார் நமீதா. எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழுக்கு வந்த நமீதாவு தமிழ் சினிமாவில் 13 ஆண்டு சர்வீஸ் போட்டு விட்டார். 45 படங்களில் நடித்துள்ள அவர் அத்தனை படங்களிலும் கவர்ச்சிக்கே பிரதானம் கொடுத்ததுதான் விசித்திரமாகும்.
ஆனால் தற்போது புது அவதாரம் எடுத்துள்ளாராம் நமீதா. இனிமேலும் கவர்ச்சியை மட்டுமே பிரதானமாக எடுத்துக் கொள்ள மாட்டேன். விதம் விதமான ரோல்களில் நடிக்கப் போகிறேன் என்று கூறுகிறார் நமீதா.
வழக்கமான கேள்வியை செய்தியாளர்கள் கேட்டபோது, எதற்குக் கல்யாணம்.. அதான் என் மச்சான்களின் லவ் உள்ளதே. அது போதும் என்று பேசி சென்டிமென்ட்டாக டச் செய்து விட்டார் நமீதா.