பெற்றோர்களை கொல்வதற்கு சிறுவர்களுக்கு மூளைச்சலவை செய்யும் ஐ.எஸ். தீவிரவாதிகள்
ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தும் தீவிரவாதிகள் தனிநாடு அமைத்துள்ளனர். அவர்கள் தற்கொலை படை தாக்குதல் நடத்துகின்றனர். அதற்கு சிறுவர்களை பயன்படுத்துகின்றனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் போர்க்கைதிகளாக சிக்குபவர்கள் ஆவர். 5 முதல் 12 வயது வரை உள்ள சிறுவர்களை பிடித்து சென்று அவர்களுக்கு மூளைச் சலவை செய்து தற்கொலை தாக்குதலுக்கு தயார்படுத்துகின்றனர்.
பொதுவாக தீவிரவாதிகள் ஆவதை எந்த பெற்றோரும் விரும்புவதில்லை. எனவே, பயிற்சியின் போதே முதலில் அவர்களை கொலை செய்யும் படி சிறுவர்களை தூண்டுகின்றனர்.
அதன்படி தற்கொலை பயிற்சி பெறும் சிறுவர்கள் தங்கள் பெற்றோரை கொலை செய்யும் கொடூரம் நடக்கிறது. இந்த தகவல் நசீர் என்ற 12 வயது சிறுவன் மூலம் தெரியவந்துள்ளது.
ஐ.எஸ்.தீவிரவாதிகள் வெளியிட்ட பிரசார வீடியோவில் சிறுவன் நசீர் பேசினான். அப்போது அவன் இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டான். ரக்காவில் அல் பரூக் என்ற நிறுவனத்தில் 60 சிறுவர்களுக்கு தற்கொலை தாக்குதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக அவன் கூறினான்.
இப்பயிற்சியின் போது சிறுவர்கள் அழ தீவிரவாதிகள் அனுமதிக்க மாட்டார்கள். அந்த விஷயத்தில் கடுமையாக இருப்பார்கள்.
தங்களின் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக்கும் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களை கொலை செய்யும்படி அறிவுறுத்துவார்கள்.
குண்டு வீச்சு நடைபெறும் போது தங்களை பூமிக்கு அடியில் உள்ள சுரங்கங்கள் மற்றும் பதுங்கு குழிகளில் தங்க வைப்பார்கள் என்றும் அவன் தெரிவித்தான்



