Breaking News

சுகவீனமுற்று முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும் , மூத்த உறுப்பினரும் கல்முனை மாநகரசபையின் பிரதி மேயரும்மான ஏ .எல் .அப்துல் மஜீத் அவர்களை முதலமைச்சர் சந்தித்தார்

முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும் , மூத்த உறுப்பினரும் கல்முனை மாநகரசபையின் பிரதி மேயரும் இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான முழக்கம் ஏ .எல் .அப்துல் மஜீத் சுகயீனமுற்று மட்டக்களப்பு தள வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதனை கேள்வியுற்ற முதலமைச்சர் 

அங்கு சென்று சுகம் விசாரித்து கொண்டிருந்த போது முழக்கம் மஜீத் தனது கையில் மாண்புறு மருதமுனை - வரலாற்று பதிவுகள் என்னும் புத்தகத்தினை வாசித்து கொண்டு இருப்பதை கண்ட முதலமைச்சர் நசீர் அகமட் பெருமிதமடைந்ததுடன் அனைவரும் அவருக்காக துவா செய்து விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென இறைவனை பிரார்த்தித்து கொண்டார் .

மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பல நோயாளிகளையும் சந்தித்து சுகம் விசாரித்து கொண்டதனை படத்தில் காணலாம் .