இராணுவ புலனாய்வுத்தளத்துக்கு சீல்வைப்பு
கிரிந்தலையில் இயங்கிய இராணுவ புலனாய்வுமையம், சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் போனமை, மற்றும் அதனுடன் தொடர்புடைய நீதிமன்ற செயற்பாடுகள் காரணமாக இராணுவத்தளபதியின் அறிவுறுத்தலுக்கு அமையவே இத்தளத்துக்கு நேற்று சீல் வைக்கப்பட்டு அங்கிருந்த சகல ஆவணங்களும் இராணுவ பொலிஸிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.



