அந்த ஒத்தக் "குத்து" தில் . அத்தனை மனங்களையும் அள்ளிப் போட்ட ரித்திகா!!
இறுதிச்சுற்று படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனங்கவர்ந்த நடிகையாக மாறியிருக்கிறார் ரித்திகா சிங்.ஒரே படத்தில்.. ஓஹோவென ரசிகர்களின் மனங்களைக் கைப்பற்றி கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட இளசுகளை டெபாசிட் இழக்க வைத்து விட்டது ரித்திகாவின் அட்டகாசமான, திறமையான நடிப்பு.
துரோகி படத்தின் மூலம் தோல்வியை ருசித்த இயக்குநர் சுதா கொங்கராவின் 2 வது படைப்பாக வெளியாகியிருக்கும் படம் தான் இறுதிச்சுற்று. முதல் படம் பெரியளவில் தோல்வி அடைந்த போதும் கூட மனம் தளராது இறுதிச்சுற்றின் வெற்றியால் இந்தியளவில் கவனம் பெற்றிருக்கிறார் சுதா. அதே போல இந்தப் படத்தின் அறிமுக நடிகையான ரித்திகா சிங்கிற்கும் ஒரு மிகப்பெரிய வரவேற்பைக் கொடுத்திருக்கிறது மாதவனின் இறுதிச்சுற்று. இறுதிச்சுற்று படத்தின் வெற்றியால் இப்படத்தில் இடம்பிடித்த அனைவரும் ஒரே நாளில் வெளிச்சத்திற்கு வந்து விட்டனர்.



