Breaking News

காதலை பற்றி இப்படி சொல்லிய அனுஷ்கா!

காதல் என்பது இளம் வயதில் ஏற்படும் மாயை என்று தெரிவித்துள்ளார் நடிகை அனுஷ்கா. தெலுங்கு, தமிழ் படங்களில் மிகவும் பிசியாக இருப்பவர் நடிகை அனுஷ்கா. கடந்த ஆண்டு அவர் நடிப்பில் என்னை அறிந்தால், பாகுபலி, ருத்ரமா தேவி, இஞ்சி இடுப்பழகி ஆகிய படங்கள் ரிலீஸாகின. தற்போது அவர் பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 

சூர்யாவின் எஸ்-3 படத்திலும் நடிக்கிறார். இந்நிலையில் அனுஷ்கா காதல், திருமணம் பற்றி பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

காதல் என்பது இளம் வயதில் அதாவது தெளிவு இல்லாத வயதில் ஏற்படும் ஒரு வகை மாயை, அவ்வளவு தான். இளம் வயதில் உள்ள அனைவரையும் அந்த மாயை பிடிக்கிறது.