Breaking News

15 ஆண்டுகள் கழித்தே மனைவியை புரிந்துகொண்ட அமெரிக்க ஜனாதிபதி !!!

ஹாலிவுட் நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான எல்லென் டி ஜெனரெஸ் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களை சந்தித்து, பேட்டி எடுத்து வருகிறார். அவ்வகையில், காதலர் தினத்தை முன்னிட்டு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை அவர் நேர்காணல் செய்தார்.

அப்போது, தனது மனைவி மிச்சேலை மிகவும் நேசிப்பதாக தெரிவித்த ஒபாமா, நாட்டின் அதிபராக பல உயர்ந்த முடிவுகளை எடுத்திருக்கிறேன். நான் எடுத்த மிகச் சிறந்த முடிவு மிச்சேலை எனது வாழ்க்கை துணையாக தேர்வு செய்ததுதான் என தெரிவித்தார்.

காதலுக்கு பின்னால் அமையும் இல்லற வாழ்க்கையை சண்டை சச்சரவு இல்லாமல் கழிப்பதற்கு தேவையற்ற வாக்குவாதங்களை ஆண்கள் தவிர்க்க வேண்டும் என குறிப்பிட்ட ஒபாமா, மிச்சேல் எடுக்கும் முடிவுகள் எப்போதுமே சரியானதுதான் என்பதை 15 ஆண்டுகள் கழித்தே நான் புரிந்து கொண்டேன். அதன்பின்னர், எங்களுக்குள் சச்சரவு ஏற்பட்டதில்லை என கூறினார்.