என்ன சிம்புவும் நயன்தாராவும் கல்யாணம் பண்ணிட்டாங்களா?..
சிம்பு-நயன்தாரா இருவரும் மாலையும், கழுத்துமாக நிற்பது போன்ற ஒரு போஸ்டர் சென்னை மாநகரம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னாள் காதலர்கள் சிம்பு, நயன்தாரா மீண்டும் இணைந்து நடித்திருக்கும் படம் இது நம்ம ஆளு.
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது. இந்நிலையில் இன்று சென்னை முழுவதும் சிம்பு-நயன்தாரா மாலையும், கழுத்துமாக நிற்பது போன்ற ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



