Breaking News

கோஹ்லிக்கு அப்புறம் அனுஷ்கா சர்மாவின் புதிய நண்பர் இவர்தான்!

கிரிக்கெட் வீரர் வீராத் கோஹ்லியை விட்டுப் பிரிந்த பின்னர் நடிகை அனுஷ்கா சர்மா ரொம்ப சோகமாக இருப்பார் என்றுதானே நினைக்கிறீர்கள்.. அதுதான் இல்லையாம்.. அவருக்கு இப்போது ஒரு சூப்பர் பிரண்ட் கிடைத்து விட்டாராம். எப்போது பார்த்தாலும் அவருடன்தான் ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கிறாராம் அனுஷ்கா சர்மா.

தற்போது சுல்தான் என்ற படத்திற்காக தயாராகிக் கொண்டிருக்கிறார் அனுஷ்கா. இதற்காக தீவிரப் பயிற்சியிலும் அவர் இறங்கியுள்ளார். ஒரு மல்யுத்தக் காட்சிக்காக அவர் தயாராகி வரும் வீடியோவும் வெளியாகியுள்ளது.