கோஹ்லி, ரோஹித் போல ஒரு வீரரைக் கூட உருவாக்க முடியாது.. வக்கார் யூனிஸ்
இந்தியாவின் ஐபிஎல் போல எங்களது பாகிஸ்தான் சூப்பர் லீக் இல்லை. கண்டிப்பாக எங்களது லீக் மூலம் விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா போல ஒரு வீரரை உருவாக்க முடியாது என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ்.
ஐபிஎல் போட்டிகளிலிருந்து சிறந்த வீரர்கள் உருவாவது போல பாகிஸ்தான் சூப்பர் லீக்கிலிருந்து யாரையும் எதிர்பார்க்க வேண்டாம் என்றும் வக்கார் யூனிஸ் பாகிஸ்தானியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளஆர். சிட்னியில் அவர் அளித்த ஒரு பேட்டியின்போது இப்படி இந்திய சூப்பர் லீக்கையும், இந்திய வீரர்களையும் புகழ்ந்து பேசினார் யூனிஸ்.



