மட்டு காத்தான்குடியில் பொலிஸ் மற்றும் பிஸ்மி குழுமத்தின் சுதந்திர தின நிகழ்வுகள்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 68வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் பல்வேறு இடங்களில் சுந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதற்கமைவாயக காத்தான்குடி பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த 68வது சுதந்திர தின நிகழ்வு நேற்று 4 வியாழக்கிழமை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.ஜி.துஷார திலங்க ஜெயலால் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பல்வேறு பிரிவுகளின் பொறுப்பதிகாரிகள்,ஆண்,பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது இலங்கை திருநாட்டின் தேசிய கொடி ஏற்றப்பட்டு அதற்கான மரியாதை செலுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.
இதே வேளை காத்தான்குடி பிஸ்மி குழுமம் ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வு பிஸ்மி தலைமைக் காரியாலத்தில் பிஸ்மி குழுமத்தின் தவிசாளர் எம்.பீ.எம்.பிர்தௌஸ் (நளீமி) தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக
சட்டத்தரணி எம்.உவைஸ் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதியாக ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி எம்.எச்.எம்.புகாரி (பலாஹி) உட்பட கல்வியலாளர்கள்,ஊர் பிரமுகர்கள்,மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டார்.
இங்கு சுதந்திர தின நிகழ்வு அடங்கிய நிகழ்ச்சிகள் பிஸ்மி இஸ்லாமிய பாடசாலை மாணவர்களினால் அறங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தகது.
-பழுலுல்லாஹ் பர்ஹான்-


