ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி -கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திப்பு-மீள் குடியேற்றம் தொடர்பாக விரிவாக ஆராய்வு-படங்கள்
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி போல் கோட்பெரி இன்று 2016.02.15 திருகோணமலைக்கு விஜயம் செய்து கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டை திருகோணமலை உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள முதலமைச்சு அலுவலகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பினை மேற்கொண்டார் .
இதன் போது கிழக்கு மாகாணம் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் ஓன்று இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து ஊடகத்துக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் நசீர் அஹமட் இக் கலந்துரையாடலில் மிக முக்கிய விடயமாக கிழக்கு மாகாண மீள் குடியேற்றம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதாகவும்,கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்த சூழ் நிலையினால் சொந்த இருப்பிடங்களை இழந்து வாழ்கின்ற மக்களின் மீள் குடியேற்றத்தினை நிவர்த்தி செய்து வாழ்வாதார அபிவிருத்தி திட்டங்களினை முன்னெடுப்பது தொடர்பாகவும் கிழக்கு மாகாணத்தில் இன்று உள்ள சிறந்த ஆட்சி மூலம் மக்களுக்கிடையிலான இன நல்லுறவினை கட்டியெழுப்பி சிறந்த ஒரு சமூகத்தினை உருவாக்குவது சம்பந்தமாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.
மேலும் கிழக்கு மாகனத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களின் இன்றைய நிலையினை சுட்டிக்காட்டி அதன் நிலையினை மாற்றி பாரிய அபிவிருத்தி திட்டங்களை உள்ளுராட்சி சபைகள் மூலம் முன் எடுத்து அதற்;கான நிதியினை திரட்டுவது மற்றும் இத்திட்டத்திற்காக அதிகளவான நிதிகளை பெற்று மக்களின் வாழ்வாதார இயல்பு நிலையினை முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்று வாழ்வின் அபிவிருத்தியில் ஐரோப்பிய யூனியனும் முழுமையான பங்களிப்பினை வழங்க உள்ளதாகவும் கிழக்குமாகாண முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அஹமட் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்தார்.



