காத்தான்குடி -ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் மௌலவி ஹாபிழ் பட்டமளிப்பு விழா-படங்கள்
இலங்கையில் மிகவும் பழமைவாய்ந்த அறபுக் கல்லூரிகளில் ஒன்றான காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் மௌலவி ஹாபிழ் பட்டமளிப்பு விழா அண்மையில் புதிய காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள ஜாமிஆ கடைத்தொகுதியில் இடம்பெற்றது.
ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் இயக்குநர்சபைத் தலைவரும்,தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் ஏ.எம்.அலியார் (ரியாழி) தலைமையில் இடம்பெற்ற மேற்படி பட்டமளிப்பு விழாவில் சிறப்புரையை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ரீ.எம்.றிஸ்வி (மஜீதி) நிகழ்த்தினார்.
இதன் போது ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் இயக்குநர் சபைத் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எம்.அலியார் (ரியாழி), ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் இயக்குநர் சபை உப தலைவரும் , காத்தான்குடி காழி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி),வாழைச்சேனை அல்குல்லியதுல் அந்நஹ்ஜாஹ் அல் இஸ்லாமியா அறபுக் கல்லூரியின் அதிபர் எம்.ஏ.றஹ்மதுல்லாஹ் (பலாஹி) ஆகியோரினால் ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் மௌலவி பட்டமும் 7 பேர் ஹாபிழ் பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த பட்டமளிப்பு விழாவில் காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான மௌலவி எம்.எச்.எம்.புகாரி (பலாஹி),மௌலவி ஏ.ஜீ.எம்.அமீன் (பலாஹி) , அஷ்ஷெய்க் எம்.ஐ.கபூர் (மதனி),காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் பிரதிநிதிகள்,உலமாக்கள்,ஊர்பி ரமுகர்கள்,
கல்வியலாளர்கள், ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரி நிருவாகிகள் உட்பட அதன் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி,புதியகாத்தான்குடி ,ஏறாவூர்,ரிதிதென்னை ,காத்தான்குடி பாலமுனை போன்ற பிரதேங்களைச் சேர்ந்த 5 ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரி மாணவர்கள் மௌலவி பட்டம் பெற்றதோடு 7 ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரி மாணவர்கள் ஹாபிழ் பட்டம் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.












