இளைஞர்களே! மைத்திரி யுகத்தில் புதிய யுகம் படைத்து உலகை வெல்வோம் -ஓட்டமாவடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் பாரிஸ்
இளைஞர்களே மைத்திரி யுகத்தில் புதிய யுகம் படைத்து உலகை வெல்வோம் என ஓட்டமாவடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் எம்.ரீ.எம்.பாரிஸ் தெரிவித்தார்.
கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற கோறளைப்பற்று மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 2016ம் ஆண்டுக்கான பொதுக்கூட்டமும் புதிய நிருவாகத் தெரிவின் பிற்பாடு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது நாட்டில் நல்லாட்சி மலர்கின்றது இதற்கு அதிகபடியான பங்களிப்பு செய்தவர்கள் இளைஞர்கள் அந்த வகையில் இந்நாட்டின் தேசிய வளமாக இளைஞர்கள் பார்க்கப்படுகின்றனர் என்பதனை நாம் நினைவூட்டுகின்றோம்.
கடந்த காலங்களில் இளைஞர்களை கனவு உலகில் மிதக்க செய்து சர்வதேசத்திற்கு படம் காட்டியவர்கள் இன்று எம்மவர்கள் மத்தியில் இல்லை மாயமாக மறைந்து விட்டனர். அதற்கு மாறாக ஊழல், இலஞ்சம் என்று ஏணி படி ஏறி இறங்கி வருகின்றனர்.
வெளிப்படை மற்றும் உண்மை தன்மையான அரசாங்கம் எமக்கு கிடைத்துள்ளது. அதிலும் விஷேடமாக இந்நாட்டில் இளைஞர்களின் நலன் பேணும் தேசிய நிறுவனமாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் திகழ்கின்றது.
எமது மட்டக்களப்பு மாவட்டம் தமிழ்,முஸ்லிம்,சிங்கள,கிறிஸ் தவம் என பலதரப்பட்ட சமயங்களையும் கொள்கைகளையும் பின்பற்றும் இளைஞர்கள் வாழும் மாவட்டமாகும் அந்த வகையில் இந்நாட்டில் இளைஞர்களினது ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக இளைஞர் கழகங்களை சிறப்பாக வழி நடாத்தி செயற்பட்டு வரும் மட்டக்களப்பு பிராந்திய தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் உள்ளமை பெருமை தக்க விடயமாகும்.
மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸினதும் இளைஞர் சேவை அதிகாரிகளினதும் வழிகாட்டலில் நாம் கடந்த காலங்களில் மிகச்சிறப்பாக செயற்பட்டோம் எதிர்காலங்களிலும் செயற்படவுள்ளோம்.
இறைவனின் உதவியோடு எமது பிரதேச இளைஞர்களின் ஆதரவுடன் நான் இம் முறை பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளேன். கடந்த காலங்களில் நாம் விட்ட பிழைகளை சீரமைத்து இவ் ஆண்டில் இலங்கையில் உள்ள பிரதேச இளைஞர் கழக சம்மேளனங்களில் முதன்மையான இளைஞர் கழக சம்மேளனமாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சம்மேளனம் திகழ வேண்டும் என்பதும் அக்கௌரவத்தினை எமது பிரதேசத்தின் இளைஞர்கள் பெறுவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு என தெரிவித்தார்.
மேலும் அவர் வாருங்கள் இளைஞர்களே மைத்திரி யுகத்தில் புதிய யுகம் படைத்து உலகை வெல்வோம் என பிரதேச இளைஞர்களுக்கு அன்பான அழைப்பினையும் விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.



