ஓட்டமாவடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவராக எம்.ரீ.எம்.பாரிஸ் தெரிவு

-பழுலுல்லாஹ் பர்ஹான்-
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ் இயங்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 2016ம் ஆண்டுக்கான பொதுக் கூட்டமும் புதிய நிருவாகத் தெரிவும் அண்மையில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக மன்டபத்தில் இடம்பெற்றது.
பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் முன்னால் தலைவர் எஸ்.எம்.நப்ராஸ் தலைமையில் இடம் பெற்ற மேற்படி நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான திருமதி .கலாராணி ஜேசுதாசன்,திருமதி நிசாந்தி அருள் மொழி, பிரதேச செயலகத்தின் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.றுவைத்,கோறளைப்பற்று மேற்கு இளைஞர் சேவை அதிகாரி பீ.எம்.றியாத்,மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் உப தலைவர் திவியநாதன் உள்ளிட்ட பிரதேச சம்மேளனத்தின் முன்னால் நிருவாக சபை உறுப்பினர்கள் முக்கிய நபர்கள் கலந்து கொண்டு 2016ஆம் ஆண்டுக்காண கோறளைப்பற்று மேற்கு பிரதேச சம்மேளனத்தின் புதிய நிருவாகத் தெரிவினை மேற்கொண்டனர்.
இதன் போது குறித்த நிருவாக தெரிவில் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய தலைவராக இளம் ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் போட்டியின் அடிப்படையில் பிரதேசத்தின் அதிக படியான இளைஞர்களின் அபிமானத்தை பெற்று தெரிவு செய்யப்பட்டார்.


