Breaking News

Facebook ஊடக ஜனாதி மைத்திரிபால சிறிசேனவிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் புலனாய்வுப் பிரிவு விசாரணை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Facebook ஊடக  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. 
பொதுபலசேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் கைதானதன் பின்னரே அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த அச்சுறுத்தல்கள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.