சாய்பல்லவியுடன் ரொமான்ஸ்... கொண்டாடும் ரசிகர்கள்
பிரேமம் மலர் டீச்சரான சாய்பல்லவி மலையாளத்தில் அடுத்து நடிக்கும் படம் களி... இந்த படமும் அவருக்கு ரொமான்ஸ் படமாகவே அமைந்துள்ளது என்பதை படத்தின் ஃபஸ்ட் லுக் பார்க்கும் போதே தெரிகிறது.
மணிரத்னத்தின் படத்தில் கார்த்தியுடன் ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் சாய் பல்லவி. இதுவும் காதலை சொல்லும் படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
ஒரு அறிமுக நடிகைக்கோ நடிகருக்கு தனது முதல் படம் நூறு நாட்களைத் தாண்டி ஓடினால் அதைவிட பெரிய வரம் எதுவும் வேண்டுமா என்ன..? அப்படித்தான் மலையாளத்தில் சாய்பல்லவி நடித்த பிரேமம் படத்தை கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.
சென்னையிலும் கூட பிரேமம் நூறு நாட்களை தாண்டியது காரணம் மலர் டீச்சர் மீதான கிரேஸ்தான். அதேபோல மம்முட்டியின் மகன் என்கிற அறிமுகத்தோடு துல்கர் சல்மான் ஹீரோவாக களம் இறங்கிய, 'செகண்ட் ஷோ' படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.. இந்த நான்கு வருடங்களுக்குள் துல்கரின் வளர்ச்சி கிடுகிடுவென உயர்ந்து விட்டது.. ஆனாலும் ரசிகர்கள் இன்னும் 'செகண்ட் ஷோ' படத்தை கொண்டாடவே செய்கிறார்கள்.



