சுயதொழில் முயற்சியாளர்களுக்கான சுயதொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயதொழில் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் பல ஊக்குவிப்பு உதவி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .
இதன் கீழ் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறுக்கின் 2015 ஆம் ஆண்டுக்கான மாகாணசபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து வறுமை கோட்டின்கீழ் வாழுகின்ற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார சுயதொழில் ஊக்குவிப்பு திட்டத்தின் சுயதொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டது .
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி ,ஆரையம்பதி , காத்தான்குடி , மண்முன வடக்கு ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட சுயதொழில் முயற்சியாளர்களுக்கான சுயதொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு முன்னால் நகர பிதா அல்-ஹாஜ் மர்சூக் அகமட் லெப்பை தலைமையில் காத்தான்குடி ஹிபுல்லா கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது .
இதன் போது சுயதொழில் முயற்சியாளர்களுக்கு தையல் இயந்திரங்கள் , உணவு உற்பத்தி செய்பவர்களுக்கான ஏறி வாய்வு அடுப்புகள் அதனுடன் உணவு தயாரிக்கும் உபகரணங்கள், துவிச்சக்கர வண்டிகள் போன்ற சுயதொழிலுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டது .
இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கொள்கைப் பரப்பு செயலாளர் அல்-ஹாஜ் யு .எல் .எம் . என் . முபீன் , காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ் .எச் . முஸம்மில் , மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ் . அருள்மொழி , மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் .எஸ் .தில்லைநாதன் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பயனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர் .



