Breaking News

மட்டக்களப்பு புதுப்பாலமருகே முச்சக்கர வண்டி விபத்து - படங்கள்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கன்னனகி அம்மன் (புதுப்பாலம் ) பிரதான வீதியின் புதுப்பாலம் பகுதியில் முச்சக்கர வண்டி  வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில்  வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதன் காரணமாக  விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது . .

 ஏறாவூர் பகுதியை சேர்ந்த ஐ .எம் . ஆசிர்  என்பவருடைய முச்சக்கர வண்டியே  இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது .

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் உறவினர்  ஒருவரை பார்த்து விட்டு மீண்டும் ஏறாவூர் செல்லும் வழியிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக உறவினர் தெரிவிக்கின்றனர் . .







இவ்விபத்தில் முச்சக்கர வண்டியை செலுத்தியவரும் அதில் பயணித்தவர்களும் எதுவித காயங்கள் இன்றி மயிரிழையில் உயிர்தப்பியுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர் .