அமெரிக்காவில் மர்மநபர்கள் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் பலி
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் இன்று மர்மநபர்கள் அடுத்தடுத்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் பலியானதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இங்குள்ள டெக்சாஸ் நகரின் கலாமாஸூ பகுதியில் உள்ள கிராக்கர் பேரல் ரெஸ்டாரண்ட் என்ற உணவு விடுதி மற்றும் கார் விற்பனை ஷோரூம் மீது அவ்வழியாக காரில் சென்ற சிலர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில் ஆறுபேர் பலியானதாகவும் கலாமாஸூ பகுதி ஷெரிப் அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், சம்பவ இடத்தை முகாமிட்டுள்ள பத்திரிகையாளர்களில் சிலர் பலி எண்ணிக்கை பன்மடங்காக இருக்கும் என கூறுகின்றனர். விரிவான தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.