இந்த வாரம் கைதுசெய்யப்படுவதற்கு தயாராக இருக்குமாறு மகிந்த நாமலுக்கு எச்சரிக்கை !
மகிந்த ராஜபக்ச தனது மகன் நாமல் ராஜபக்சவை இந்த வாரம் கைதுசெய்யப்படுவதற்கு ஆயத்தமாக இருக்குமாறு கேட்டுள்ளார்.
அதாவது ஒருநபரை கைதுசெய்வதற்கு முன்னர் அவர் குறித்து கேள்வி எழுப்பப்டுவது தற்போதைய பாராளுமன்றத்தின் வழமையாக உள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர் சென்றவாரம் நாமல் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டதனாலேயே தனது மகனை கைதுசெய்யப்படுவதற்கு தயாராகயிருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
நீர்கொழும்பில் நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளின் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவாறான எச்சரிக்கையை விடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.



