ரஜினி, விக்ரமை தொடர்ந்து மலேசியா செல்லும் சூர்யா - எஸ்3
ரஜினியின் ‘கபாலி’, விக்ரமின் ‘இருமுகன்’ ஆகிய படங்களின் முக்கியமான காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது. அதேபோல், தற்போது சூர்யா நடித்துவரும் ‘எஸ்3’ படத்தின் முக்கியமான காட்சிகளையும் மலேசியாவில் படம்பிடிக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சூர்யா நடிக்கும் ‘எஸ்3’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து காரைக்குடியில் சில காட்சிகளையும், சென்னையில் சில காட்சிகளையும் படக்குழுவினர் படமாக்கினர்.
தற்போது, மலேசியாவில் சில முக்கியமான காட்சிகளை படம்பிடிக்க படக்குழு வருகிற மார்ச் 7-ந் தேதி மலேசியாவுக்கு பயணமாக இருக்கின்றனர். மலேசியாவில் தொடர்ந்து 20 நாட்கள் படப்பிடிப்பை நடத்தவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தை ஹரி இயக்கி வருகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்காவும், ஸ்ருதிஹாசனும் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.



