புனர்வாழ்வை மறுத்த அரசியல் கைதிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில் !
அரசியல் கைதிகள் புனர்வாழ்விற்கு செல்வதற்கு மறுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம்(11.02.16) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட 14 தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் புனர்வாழ்வுக்கு செல்ல மறுத்தமையால் அவர்களின் வழக்கை தொடர்ந்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. தற்பொழுது அவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.



