தேசிய கொடியிலுள்ள சிங்கத்தை நீக்குமாறு கோரிக்கை
இலங்கை தேசிய கொடியில் உள்ள வாளேந்திய சிங்கமானது, வன்முறையின் அடையாளமாக கருதப்படுவதாக குறிப்பிட்டு அதனை நீக்குமாறு மகளிர் அமைப்புகளால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது .
இத்தீர்மானமானது மன்னாரில் இடம்பெற்ற புதிய அரசியல் சாசனம் தொடர்பான மக்கள் கருத்தறியும் கூட்டத்தின்போது இக்கருத்து முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் தேசியக் கொடியில் காணப்படும் சிங்கத்தின் படம் ஒரு இனத்தை மட்டுமே பிரதிபலிப்பதாகவும் அனைத்து இனங்களையும் பிரதிநித்துவப்படுத்தும் வகையில் தேசியக் கொடியின் வடிவமைப்பு இருக்கவேண்டும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.



