வெற்றி உற்சாகத்திற்கு மத்தியில் அமைதியாக இன்று பிறந்த நாளை கொண்டாடும் சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 31 வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். ரஜினி முருகன் அவரை உச்சத்தில் கொண்டு போய் வைத்துள்ள போதிலும் அடக்கமாக, அமைதியாக தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு இணையாக சிவகார்த்தியின் பிறந்தநாளை #HBDsivakarthikeyan என்று ஹெஷ்டேக் போட்டு ரசிகர்கள் கொண்டாட அது இந்தியளவில் ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கிறது. வெறும் 9 படங்களிலேயே பாக்ஸ் ஆபிஸ் நாயகன் என்ற அளவிற்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



