Breaking News

கல்லடி ஹரி சிறுவர் இல்ல மாணவர்களின் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்வு- படங்கள்

(என்டன் )
மட்டக்களப்பு கல்லடி ஹரி சிறுவர்  இல்ல மாணவர்களின் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்வு  மட்டக்களப்பு  கல்லடி ஹரி சிறுவர்  இல்ல மண்டபத்தில் இடம்பெற்றது .

கல்லடி  ஹரி சிறுவர்    இல்ல மாணவர்களில் கல்வி பொது தராதர உயர்தரத்தில்  "B"  பெறுபேறுகளை பெற்று பல்கலைக்கழக பொறியியல் பீடத்துக்கு தெரிவான இல்ல மாணவன் .என் நிலோஜன், கல்வி பொது தர சாதாரண தரத்தில் 8A.1C, பெற்று சாதனை படைத்த  மாணவன் ஜி . மங்களன்   மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் 175 புள்ளிகளை பெற்று சாதனை படைத்த மாணவன் எஸ் ,மதுஷன் ஆகியோருக்கு  விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு ஹரி சிறுவர்    இல்ல தலைவர் எஸ் .சந்திரகுமார் தலைமையில் ஹரி சிறுவர்  இல்ல மண்டபத்தில் இடம்பெற்றது .

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா ,வைத்தியர் பாலசுப்பிரமணியம் ,மாஸ்டர் சிவலிங்கம் , சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் , சமூகசேவை உத்தியோகத்தர் ,பல்கலைக்கழக உபவேந்தர்  திருமதி ,ஜெசங்கர் மற்றும் இல்ல ஆசிரியர்கள் , மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .