காணாமற்போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு கலைக்கப்படும் சாத்தியம்
காணாமற்போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிகாலம் நேற்று திங்கட்கிழமையுடன் நிறைவடைந்துள்ள போதும், அதனை நீடிப்பதற்கான அறிவிப்பு ஜனாதிபதியினால் வழங்கப்பட்டிருக்கவில்லை. எனவே இவ்வாணைக்குழு கலைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வானைகக்குழுவின் பணிகள்களில் நம்பகத்தன்மை குறைவாக காணப்படுவதனால் அதனை கலைக்குமாறு மனித உரிமைகள் ஆணையாளர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன் அரசாங்கத்தின் அமைச்சர்களும் இவ்வானைக்குழுவினை கலைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



