நீதிமன்ற வளாகத்தில்லேயே துப்பாக்கிச் சூட்டிற்கிலக்காகி ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம்!
பலப்பிடிய நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்றிற்கு சாட்சியமளிக்க வந்த இருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அங்கு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மறோருவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
.
மேலும் இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.



