சட்டவிரோத தங்கக் கடத்தலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் ; ஜனாதிபதி
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு தங்கம் கடத்தும் வியாபாரத்தைத் தடுக்க, உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
வங்கிகளில் ஏலம்மூலம் விற்கபடும் தங்கங்களையே, சட்டவிரோத வியாபாரிகள் வாங்கி அவற்றை நாடு கடத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இவ் வியாபாரத்தைத் உடனடியாக தடுத்து நிறுத்த, திட்டமிடப்பட்ட நடவடிக்கை எடுக்குமறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளிடம் பணிப்புரை விடுத்தார்.



