Breaking News

கொளுத்தும் வெயிலில் நடிப்பது மிகவும் கஷ்டம்... புலம்பும் அனுஷ்கா

கொளுத்தும் வெயிலில் மேக்கப் போட்டு நடிப்பது கஷ்டமாக உள்ளது என நடிகை அனுஷ்கா தெரிவித்திருக்கிறார். பாகுபலி வெற்றியால் தமிழ், தெலுங்கின் முன்னணி நடிகைகளில் ஒருவராக அனுஷ்கா வலம்வருகிறார். கடந்தாண்டு வெளியாகி மாபெரும் வசூலைக் குவித்த பாகுபலி படத்தின் 2 வது பாகத்தில் அனுஷ்கா தற்போது நடித்து வருகிறார்.

முந்தைய பாகத்தில் அனுஷ்காவை அடிமையாக இயக்குநர் ராஜமௌலி காட்டியிருந்தார். அதற்குப் பரிகாரமாக இப்பாகத்தில் கலர்புல் ஆடைகள், கிரீடங்கள் அணிந்து இளவரசியாக அனுஷ்கா ஜொலிக்கவுள்ளார். மேலும் பிரபாஸ்-அனுஷ்கா காதல் காட்சிகளுக்கும் இப்படத்தில் நிறைய முக்கியத்துவம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.