படுத்திருந்த கணவனை வெட்டிக் கொலைசெய்த மனைவி கைது
முரண்பாடு காரணமாக உறங்கிக்கொண்டிருந்த கணவனின் கழுத்தை மனைவியே வெட்டிக்கொலை செய்த சம்பவமொன்று உடவளவையில், இன்று (30) இடம்பெற்றுள்ளது. இசைநிகழ்ச்சிக்குச் சென்று திரும்பும் வழியில் இருவருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து வீடு திரும்பியப் பின், படுக்கைக்குச் சென்ற 46 வயதான கணவனின் கழுத்தை மனைவி கத்தியால் வெட்டிக் கொன்றுள்ளதாக விசாரணைகளின் பின்னர் தெரியவந்துள்ளது. கொலைக்கு காரணமான குறித்த நபரின் மனைவி கைதுசெயப்படுள்ளார்.



