சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகை
1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் இலங்கையும் சர்வதேச நாணய நிதியமும் இணக்கப்பாடிற்கு வந்துள்ளது.மேற்படி கடனானது நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரித்துக் கொள்வது சம்பந்தமாக கோரப்பட்டிருந்த நிலையில், இதற்கான IMF இன் அனுமதி எதிர்வரும் ஜூன் மாதமளவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பில் நிதியமைச்சர் கூறுகையில், குறித்த கடனை பெற்றுக் கொள்வது தொடர்பில், கடநிற்கான காலம் மற்றும் பெற்றுக்கொள்ளும் முறை தொடர்பிலான அனைத்து விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளமையால் எதிர்வரும் தினங்களில் சாதகமான பதிலொன்றை எதிர்ப்பார்த்திருப்பதாகக் தெரிவித்தார்.



