Breaking News

குறைந்த நிறை உடைய பாண் விற்ற மூன்று பேக்கரி உரிமயாளர்கள் நீதிமன்றில் ஆஜர் !

அளவீடு மற்றும் தரநிர்ணய திணைக்கள அதிகாரிகள் மூன்று பேக்கரிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக  வழக்குத்தாக்கல் செய்ததன் பிரகாரம் பாண் இறாத்தல் ஒன்று கொண்டிருக்கவேண்டிய நிறையிலும், 110 கிராம் குறைவாக பாண்களை தயரித்து விற்பனை செய்தமைக்கான   குற்றத்தை ஏற்றுக்கொண்ட மூன்று பேக்கரிகளின் உரிமையாளர்களுக்கு தலா 2,000 ரூபாய் வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. தமது குற்றத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டதையடுத்தே நுகேகொடை மேலதிக நீதிவானும் மற்றும் மேலதிக மாவட்ட நீதிவானுமாகிய அனுஷ்க செனவிரத்ன மேற்படி தண்டப்பணத்தை விதித்தார்.