எலிசபெத் ராணியின் காதல் கடிதம் ரூ.14 லட்சத்துக்கு ஏலம்
இவரது கணவர் இளவரசர் பிலிப். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். காதலர்களாக இருந்த போது இளவரசர் பிலிப்புக்கு ராணி எலிசபெத் காதல் சொட்ட சொட்ட கடிதங்கள் எழுதியுள்ளார்.
அதில் ஒரு கடிதம் சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. 2 பக்கம் கொண்ட அக்கடிதம் ரூ.14 லட்சத்துக்கு ஏலம் போனது. கடந்த 1947ம் ஆண்டு ராணி எலிசபெத் சுயசரிதை புத்தகத்தை பெட்டி சேவ் என்பவர் எழுதினார்.
அதில் இக்கடிதம் இடம் பெற்றுள்ளது. இது நிர்ணயித்ததை விட 18 மடங்கு கூடுதல் தொகைக்கு ஏலம் போயுள்ளது.