Breaking News

சமந்தாவின் கனிந்த மனசு 70 இதயங்களை இயங்க வச்சிருக்கு!

இன்றைய நடிகைகளில் சிலர் நிஜமாகவே கஷ்டப்படுவோரைக் கண்டறிந்து, மனப்பூர்வமாக உதவி செய்வது ஆச்சர்யமாக உள்ளது. ஹன்சிகா செய்யும் கல்வி உதவிகள், ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் பணிகள் எல்லோருக்கும் தெரிந்தது.

சமந்தாவின் உதவிகள் இப்போது சமந்தாவும் தன் வருமானத்தை ஏழைகளுக்கு செலவிடும் பணியில் இறங்கியுள்ளார். சாதாரண குடும்பத்திலிருந்து வந்த பெண் என்பதால், இப்போது நன்றாக சம்பாதிக்கும் காலத்தில் இல்லாதவர்களுக்கு வழங்குவோம் என்ற நோக்கத்துடன் உதவிகளைச் செய்ய ஆரம்பித்துள்ளார்.

70 பேருக்கு சமீபத்தில் அவர் ஒரு அறக்கட்டளை அமைத்து அதன் மூலம் உதவி வருகிறார். இதுவரை 70 பேருக்கு இருதய அறுவைச் சிகிச்சைக்கான முழு செலவையும் சமந்தாவின் இந்த அறக்கட்டளை செய்துள்ளது.