Breaking News

ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய 31 பேரும் ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்ற தடை?

2008-ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளில் 454 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகள் (ரத்தம் மற்றும் சிறுநீர்) மீண்டும் சோதனைக்குட்படுத்தப்பட்டது. அதன் முடிவை இப்போது சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதில் 12 நாடுகளை சேர்ந்த 6 வகையான விளையாட்டுகளில் 31 பேர் ஊக்கமருந்து பயன்படுத்தி இருப்பது உறுதியாகியுள்ளது. 

இவர்களுக்கு ஆகஸ்டு மாதம் நடக்கும் ரியோடி ஜெனீரோ ஒலிம்பிக் போட்டிக்கு தடை விதிக்கப்படும் என்று தெரிகிறது. இதே போல் 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியின் போது எடுக்கப்பட்ட 250 மாதிரிகளும் நவீன முறையில் மறுபடியும் சோதனை நடத்தப்பட இருக்கிறது. 

‘‘ஊக்கமருந்து மோசடி பேர்வழிகள் அனைவரும் 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே எங்களது இலக்கு’’ என்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.