மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் மாபெரும் தொழில் வாய்ப்பு சந்தை
(என்டன் )
மட்டக்களப்பு மாவட்ட
இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் மனித வலு
வேலைவாய்ப்புத் திணைக்களமும் மட்டக்களப்பு
மாவட்ட தொழில் சேவை நிலையமும் இணைந்து
சர்வதேச தொழிலாளர் ஸ்தாபன் அனுசரணையில் மாபெரும் தொழில் வாய்ப்பு சந்தையினை இன்று மட்டக்களப்பு
செல்வநாயகம் மண்டபத்தில் நடத்தப்பட்டது .
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக
தொழில்
அமைச்சின் தொழில் வாய்ப்பு சம்மேளன ராஜாங்க அமைச்சர் ரவீந்திர
சமரவீர மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க
அதிபர் பி .எஸ் .எம் .சார்ள்ஸ், மனித வலு வேலைவாய்ப்பு திணைக்கள இயக்குனர் கலாநிதி
. எ. சாரங்க மற்றும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ் . நெடுஞ்செழியன் ஆகியோர் கலந்துகொண்டனர் .
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட தொழில் அமைச்சின் தொழில்
வாய்ப்பு சம்மேளன ராஜாங்க அமைச்சர் தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்புகள் இல்லாமல் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள்
தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் எனக்கு தெரிவித்த இந்த விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி
மற்றும் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் .
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழில் வாய்ப்புக்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கும் தொழில் வழங்குநர்களுக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்தி
தொழில் பெற்றுக்கொடுப்பதே இந்த தொழில் சந்தையின் நோக்கமாகும் என தெரிவித்தார் .
மாவட்டத்தில் தொழிலை பெற்றுக்கொள்வதற்கு வழிகாட்டுவதற்காக மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் மட்டக்களப்பு
மாவட்ட தொழில் சேவை நிலையமும் இணைந்து நடத்தப்படுகின்ற இந்த மாபெரும் தொழில் வாய்ப்பு சந்தையில் மட்டக்களப்பு மாவட்டத்தில்
இருந்து சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர் , யுவதிகள் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் முகமாக நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் முப்பதுக்கு
மேற்பட்ட தனியார் தொழில் நிறுவனங்களான ,
ஆடைத் தொழிற்சாலைகள் , ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் , கைத்தொழில் பேட்டைகள், மாவட்ட தொழில் வாய்ப்பு மத்திய நிலையங்கள்
என பல நிறுவனங்களும் அதன் முகாமையாளர்களும் கலந்துகண்டனர்.