அரநாயக்க மண்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 150ஐ தாண்டலாமென அச்சம்!
கேகாலைமாவட்டத்தின் அரநாயக்க மற்றும் புலத்கொஹூபிட்டிய பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் மண்ணுள் புதையுண்டவர்களின் எண்ணிக்கை 150ஐ தாண்டலாமென அஞ்சப்படுகிறது. அரநாயக்க பகுதியில் 17 பேரின் சடலங்களும், புலத்கொஹூபிட்டிய பிரதேசத்தில் 5 பேரின் சடலங்களும் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளன. இவ்விரு பகுதிகளிலும் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் முநெடுக்கப்பட்டு வரும் நிலையில், அரநாயக்க பகுதியில் 134 பேர் பற்றியும் புலத்கொஹூபிட்டிய பகுதியில் 16 பேர் பற்றியும் இதுவரை எவ்வித தகவலும் இல்லையென தெரிவிக்கபடுகின்றது.