ஈராக்கில் 35 பேர் உயிரோடு புதைக்கப்பட்டனர் !
ஈராக்கின் வட பகுதியில் பெரும்பாலான இடங்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த நகரங்களை மீட்பதற்காக ராணுவம் கடுமையாக போரிட்டு வருகிறது. இதனால் பல இடங்களில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியேறி வருகிறார்கள்.
ஐ.எஸ். தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் கிர்குக் நகரம் இருக்கிறது. இதை கைப்பற்றுவதற்காக நாலாபுறமும் ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. எனவே இங்குள்ள மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் தடுக்கிறார்கள்.
இதை மீறி தப்பி செல்ல முயன்ற ஒரு குடும்பத்தினரை ஒட்டுமொத்தமாக நடுரோட்டில் தீவைத்து எரித்தனர். 3 குழந்தைகள் உள்பட அந்த குடும்பத்தினர் உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டனர். இதேபோல தப்பி ஓட முயன்ற 35 பேரை பிடித்து உயிரோடு குழிதோண்டி புதைத்துவிட்ட சம்பவமும் நடந்துள்ளது.
தோல்வியில் சிக்கி இருக்கும் ஐ.எஸ். தீவிரதிவாதிகள் இதுபோன்ற மிக கொடூர செயல்களில் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து தப்பி வந்த மக்கள் கூறுகின்றனர்.