Breaking News

துபாய்யில் கண்காட்சியில் நிசான் நிறுவனம் அறிமுகப்படுத்திய 10,000,000 அமெரிக்க டாலர் மதிப்பிலான தங்க கார் !

துபாயில் நிசான் நிறுவனம் புதுமையான தங்க கார் தயாரித்துள்ளது. தங்க தகடுகளால் ஆன இக்கார் 10 லட்சம் அமெரிக்க டாலர் பெறுமதியனதாம் .

நிஸானின் ஏர் 35 ஜி.டி.ஆர். மாடல் ஆன இது ஒரு பந்தய கார் ஆகும்.இதற்கு ‘காட்ஷிலர்’ என பெயரிட்டுள்ளனர். 3.8 லிட்டர் என்ஜின் மற்றும் V6 twin turbo 545 H.P என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த கார் அதிவேகத்தில் பறந்து செல்லக்கூடிய திறன் படைத்தது.

இதில் ஏரோ டைனமிக் வடிவமைப்போடு 6 ஸ்பீடு டியூயல் கிவிட்ச் டிரான்ஸ்மிஷன் வசதி உள்ளது. இதனால் பந்தயங்களின் போது அதற்கேற்ப வேகத்தை அதிகரிக்கவோ, குறைக்கவோ முடியும். துபாயில் தற்போது குல் ரேசிங் மற்றும் ஆட்டோ மெக்கானிக் துபாய் 2016 கண்காட்சி நடைபெறுகிறது. அதில் இக்கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக்கார் பார்வையாளர்கள் அனைவரையும் மிக வெகுவாக கவர்ந்தது.