மாணவர்கள் வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும்
தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக காலை 11.30 மணி தொடக்கம் மதியம் 1.30 மணி வரையிலான காலப்பகுதிக்குள் மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியே செல்வதற்கு அனுமதிக்க வேண்டாமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது, கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் வளிமண்டலவியல் திணைக்களம் ஆகியன இணைந்து நடாத்திய ஆய்வின் பின்னரே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.



