Breaking News

30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாதிமார்களுக்கு பற்றாக்குறை

நாடளாவிய ரீதியில் சில வைத்தியசாலைகளில் தாதிமார்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது இபிரச்சனை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்க, நாடளாவிய ரீதியிலுள்ள சில வைத்தியசாலைகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாதிமார்களுக்கு பற்றாக்குறை நிலவி வருவதாகவும் வைத்தியசாலைகளில் கட்டிடங்கள் புதிதாக அமைக்கப்பட்டபோதிலும் அவற்றில் பணியாற்றுவதற்கு போதுமான அளவு தாதிமார் இல்லை என்பது கவலையளிப்பதாக தெரிவித்தார்.