நலிவுற்றோர்களுக்கான சேவைகள் வினைத்திறனாக வழங்குவது தொடர்பான உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு
இதன் கீழ் மாகாண ரீதியாகவும் , மாவட்ட ரீதியாகவும்
இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன .
இதன் ஒரு செயல்திட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் சமூக பராமரிப்பு நிலையங்களிலிலும் பிரதேச செயலகங்களிலும் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கிழக்குமாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் என் . மணிவண்ணன் தலைமையில் இன்று இடம்பெற்றது .
இன்று இடம்பெற்ற செயல்திட்டத்தில் சமூக பராமரிப்பு செயற்திட்டத்தின் ஊடாக நலிவுற்றோர்களுக்கான சேவைகள் வினைத்திறனாகவும் வெற்றிகரமாக அமைய எதுவாக சமூக பராமரிப்பு நிலைய எண்ணக்கரு உருவாக்கப்பட்டு சமூக பராமரிப்பு நிலையங்களிலிலும் ,பிரதேச செயலகங்களிளிலும் பணியாற்றுகின்ற பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் , சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் , சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் , சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , போன்ற உத்தியோகத்தர்கள் தமது சேவைகளை தனித்தனியாக வழங்குவதை விட குழுவாக இணைந்து நலிவுற்றோர்களுக்கு வழங்குவதனூடாக ஒரு பூரணமான சேவைகளை வழங்கு முடியும் என்பதனை நோக்காக கொண்டு அனைத்து உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிகள் இன்று இடம்பெற்ற செயலமர்வில் வழங்கப்பட்டது .
இந்நிகழ்வில் வளவாளராக ஜி . ஆர் . பத்மசிரி கமலத் , சமூக சேவைகள் திணைக்கள முன்னாள் செயலாளரும் , சமூக பராமரிப்பு நிலைய செயற்திட்ட இணைப்பாளருமான திருமதி . மானல் குரூப்பு ,மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள மற்றும் பிரதேச செயலக சமூக அபிவிருத்தி மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர் .