பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்பு மற்றும் முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடல்
பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்பு மற்றும்
முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது .
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப்
பிரிவில் உள்ள சிறுவர்களது பாதுகாப்பினை உறுதிபடுத்தும் நோக்குடன் பிரேதச மட்ட சிறுவர் கண்காணிப்பு குழு மற்றும்
முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி குழுக்களிடையிலான கலந்துரையாடல் பிரதேச
செயலாளர் வி .தவராஜா தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில்
இன்று இடம்பெற்றது.
இடம்பெற்ற கலந்துரையாடலின் போது
அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்ற
சிறுவர் துஸ்பிரயோகம் , பாடசாலை மாணவர்களின் இடைவிலகல் , பெண்கள் வெளிநாட்டு செல்வதனால் குடும்பத்தில் ஏற்படுகின்ற வீட்டு வன்முறைகள்
மற்றும் சிறுவர் துஸ்பிரயோகங்கள், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி போன்ற பல்வேறு
பட்ட சமூக மட்ட பிரச்சினைகள், இதற்கான தீர்வுகள் தொடர்பாக இங்கு
கலந்துரையாடப்பட்டது.
இந்த கலந்துரையாடல் நிகழ்வில்
மட்டக்களப்பு மாநகர உதவி ஆணையாளர் என் .தனஞ்சயன் , பிரதேச செயலக சிறுவர் உரிமை
மேம்பாட்டு உத்தியோகத்தர் எம் .மேகராஜ் ,
பிரதேச மட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் , கிராம சேவை உத்தியோகத்தர்கள் ,
சமுர்த்தி உத்தியோகத்தர்கள் , கிராம அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , பொலிஸ்
உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .