Breaking News

கஷ்டப் பிரதேச பாடசாலைகளுக்காக இலவச சீருடை வவுச்சரில் விசேட சலுகை

இலவச பாடசாலை சீருடை வழங்கும் திட்டத்தில், கஷ்டப்பிரதேச பாடசாலைகளுக்கு விசேட சலுகை வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். நேற்றயதினம்(10) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை  தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், ஏனைய பாடசாலைகளுக்கு வழங்கப்படும் சீருடை  வவுச்சர்போன்றே, கஷ்டப் பிரதேச பாடசாலைகளுக்கும் வவுச்சர் வழங்கப்படும் அனால் கஷ்டப் பிரதேச பாடசாலைகளுக்கு அதிகாரிகள் நேரடியாகவே சென்று, வவுச்சரைப் பெற்று சீருடை துணிகளை வழங்குவர் எனவும் இன்நடைமுறயானது விரைவில் அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.