கிழக்குமாகாண ஒளடதம் (மருந்து) பிரதிநிதிகள் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு
( என்டன்)
ஒளடதம் (மருந்து) விற்பனை பிரதிநிதிகள் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு 15.05.2016 இடம்பெற்றது .
ஒளடதம் (மருந்து) விற்பனை பிரதிநிதிகள் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு 15.05.2016 இடம்பெற்றது .
இடம்பெற்ற வருடாந்த ஒன்றுகூடல்
நிகழ்வின் போது கடந்த காலத்தில் கிழக்குமாகாணத்தில் ஒளடத விற்பனை செயல்திட்டங்கள் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது
என்பது தொடர்பாகவும் , எதிர் காலத்தில் ஒளடதங்களின் வளர்ச்சி ,மக்களின் தேவைகள் என்பதனை
கருத்தில் கொண்டு முன்னெடுப்புக்கள் அமைய வேண்டும் என்பது தொடர்பாக ஒளடத விற்பனை பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை
மகப்பேற்று பெண்நோயியல் நிபுணர் மார்கண்டு திருக்குமார் , கௌரவ அதிதிகளாக உணவு ஒளடதம்
(மருந்து) பரிசோதகர்களான எஸ் .தஸ்தகீன் , எஸ் . ஜீவராஜா , என் .தேவநேசன் ,டி .வரதராஜா
,என் .விமலசேகரன் மற்றும் கிழக்குமாகாண ஒளடதம் (மருந்து) பிரதிநிதிகளின் ஒன்றியத்தின் மட்டக்களப்பு
,அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை பிரநிதித்துவப்படுத்தும் ஒளடதம் (மருந்து) விற்பனை பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் .