கம்முதாவ திட்டத்தின் மூலம் உதயமாகும் 6வது மாதிரிக்கிராமம் மட்டக்களப்பு மயிலம்பாவெளி காமாட்சி கிராமத்தில்
(என்டன்)
மீள் எழுச்சி கம்முதாவ திட்டத்தின் மூலம் உதயமாகும் 6வது
மாதிரிக்கிராமம் மட்டக்களப்பு மயிலம்பாவெளி காமாட்சி கிராமத்தில்
நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு 15.05.2016 இடம்பெற்றது .
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன
மற்றும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக காலஞ்சென்ற ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின்
தமக்கென ஒரு வீட்டில் வாழ்வதற்கான உரிமையை
பெற்றுக்கொடுக்கும் உன்னதமான “உதாகம” எண்ணக்கருவிற்கு அமைவாக வீடமைப்பு மற்றும்
நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவின் ஆக்கபூரவமான தலைமைத்துவத்தின் 2025
ஆம் ஆண்டில் சகலருக்கும் வீடு வழங்கும் ஒரே நோக்கில் வீடமைப்பு
மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின்
வழிகாட்டலில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் நாடு பூராவும்
நடைமுறைப்படுத்தப்படும் செமட்ட செவன தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ்
மட்டக்களப்பு மாவட்டடத்தில் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில்
நிர்மாணிக்கப்பட்ட” காமாட்சி கிராம்”
மாதிரிக் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் மக்களுக்கு
கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது .
இந்நிகழ்வில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித்
பிரேமதாச , கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ் .எஸ் .அமீர் அலி
,கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே .துரைராஜசிங்கம்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா .ஸ்ரீநேசன் ,எஸ்
.யோகேஸ்வரன் , அலிசாகிர் மௌலானா , மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி .எஸ்
.எம் .சார்ள்ஸ், மற்றும் அரச திணைக்கள அதிகாரிகள் , பிரதேச
செயலாளர்கள் , மாகாணசபை உறுப்பினர்கள் , பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர் .