தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூ .பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது
( என்டன்)
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர்
ஹரன் ஆகியோரை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
மட்டக்களப்பு
நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் 2008ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
தொடர்பாக, குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் இருவரும் இன்று
செவ்வாய்க்கிழமை மீண்டும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்;.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை
தொடர்ந்து எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவு விடுத்துள்ளார் .
